|
|
படத்தொகுப்பை காண இங்கே சொடுக்கவும்
|
|
அல்லாஹ் கேட்கிறான்
எவர் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, நற்செயல்களைச் செய்து,"நிச்சயமாக நான், முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுகின்றாரோ அவரை விட அழகியச் சொல்லை சொன்னவர் யார்?"
இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;
“உங்களின் வழி ஓருவருக்கேனும் அல்லாஹ் நேர்வழியை வழங்கிடு வானேயானால், அது உங்களுக்கு கிடைக்கும் சிகப்பு ஒட்டகங்களை விட மேலானதாகும்”
(புகாரி : 42:10)
பிரிதொரு அறிவிப்பில் இப்படி இடம் பெறுகின்றது. “உங்களின் மூலம் ஒருவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அது உங்களுக்கு இந்த உலகமும் அதில் இருப்பது அனைத்தையும் விட சிறந்ததாகும்.”
இறைவனின் தூதர், தனது முதல் ஹஜ்ஜின் இறுதியில் குழுமி இருந்த தம் தோழர்களிடம் இப்படி கூறினார்கள்.
இங்கே வந்திருப்பவர்கள் இங்கே வராதவர்களுக்கு இந்தச் செய்தியை - (இஸ்லாத்தை) எடுத்துச் சொல்லுங்கள். அவர்கள் உங்களைவிட நன்றாகப் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள்.
இதனை பெருமானார் (ஸல்) அவர்கள் பிறப்பித்தக் கட்டளையாகவே எடுத்துக் கொண்டார்கள் நபித் தோழர்கள். அவர்கள், தங்கள் வாகனங்கள் எந்தத் திசையை நோக்கி நின்றனவோ, அந்தத் திசையை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். தொடர்ந்தார்கள்.
அவர்களில் பெரும்பாலோர் மீண்டும் அரேபியாவிலுள்ளத் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிடவே இல்லை.
ஆக இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைப்பதே நாம் நிறைவேற்றிட வேண்டிய முழு முதற்கடமை.
அதனை மூச்சுவிடாமல் 35 ஆண்டுகளாக செய்துவருகின்றோம்.
அதற்காக நிறுவப்பட்டதே “தாருல் இஸ்லாம் ஃபவுண்டேஷன் டிரஸ்ட்” |
|
|